பாலியல் புகார்: பதவி விலகுகிறார் ஆஸ்திரேலிய துணை பிரதமர்

Last Modified : 23 Feb, 2018 12:20 pm

முன்னாள் ஊழியருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அமைச்சரவையைச் சேர்ந்த முன்னாள் ஊழியரான விக்கி காம்பியன் என்பவருடன் பாலியல் தொடர்பில் இருந்ததாக அந்நாட்டுத துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் மீது புகார் எழுந்தது. அத்துடன் அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. 

எதிர்க்கட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கி வந்ததை அடுத்து, "ஊழியர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள அமைச்சர்களுக்குத் தடை விதிக்கப்படும். பதவியில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று" ஆஸ்திரேலிய பிரதமர் மல்காம் டர்ன்புல் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தனது துணைப் பிரதமர் பதவியை ஜாய்ஸ் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வரும் திங்கட்கிழமை தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலக உள்ளதாக ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரம் கூறுகிறது. 

பார்னபி ஜாய்சுக்கு நடாலி என்ற மனைவியும், நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி நடாலியை பிரிவதாகக் கடந்த டிசம்பரில் பார்னபி அறிவித்திருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close