சிரியாவில் பலி எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு; பிரான்ஸ், ஜெர்மன் தலைவர்கள் ஆலோசனை

  முத்துமாரி   | Last Modified : 25 Feb, 2018 10:05 am


சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப்போரில் பலி எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரும் பொருட்டு, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாட்டின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

ரஷ்ய படைகளின் உதவியுடன் சிரிய அரசுப்படைகள், கிளர்ச்சியாளர்களின் கைவசம் உள்ள கவுட்டா பகுதியை கைப்பற்றும் பொருட்டு வான்வழித்தாக்குதல் நடத்தி வருகின்றன. தொடர்ந்து ஒரு வாரமாக நடந்து வரும் இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 400 பேர் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று 500க்கும் அதிகமானோர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதில் 140 குழந்தைகளும் அடங்குவர். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்ததோடு போர் நிறுத்த ஒப்பந்தந்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 


இந்த நிலையில் சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றிய தீர்மானத்தை கொண்டு வரும் பொருட்டு குவைத், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நாவிடம் கோரிக்கை வைத்தன. அதற்கு ஐ.நாவும் ஒப்புதல் அளித்தது. ஆனால் சிரியாவுடன் போரில் இணைந்துள்ள ரஷ்யா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இந்த தீர்மானத்தில் உடன்பாடில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஜெர்மனின் ஏஞ்சலோ மெர்கல் ஆகியோர் ரஷ்ய அதிபர் புதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.