சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

  PADMA PRIYA   | Last Modified : 25 Feb, 2018 11:31 am

போர் நடந்து வரும் சிரியாவில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ நிவாரண உதவிகளை அளிக்கவும் மக்களை வெளியேற்றுவதற்காக 30 நாள் போர் நிறுத்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அரசு ஆதரவுப்  படையினர் இதுவரை இல்லாத அளவுக்குத் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இப்படியொரு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர். 

இதனைப் பயன்படுத்திப் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்குக் கூத்தா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஓயாது வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில், சிக்கி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகப் போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.


பலியானவர்களில் பாதி பேர் 15 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இருப்பினும் போர் நிறுத்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் சனிக்கிழமை ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளது. இதனை அடுத்துப் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, தற்காலிக முகாம்கள் அமைப்பது போன்ற பணிகள் இந்த 30 நாட்களில் நடக்கும். மேலும் தேவையானவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close