பப்புவா நியூ கினியா நிலநடுக்கம்; 31 பேர் பலி

  SRK   | Last Modified : 27 Feb, 2018 12:17 pm


ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், 31 பேர் உயிரிழந்துள்ளனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று காலை, கினியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக அது பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டின் பொர்கேராவில் இருந்து 90 கிமீ தொலைவில், பூமியில் இருந்து 35 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது. அதைத் தொடர்ந்து நேற்று முழுவதும் சிறு சிறு நில அதிர்வுகள் கினியாவை தாக்கியது.

இதில் பல இடங்களில் நிலச்சரிவுகள், புதை குழிகள் போன்றவற்றில் சிக்கி, 31 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 4,00,000 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கினியாவில் இயங்கிவரும் மிகப்பெரிய தனியார் சுரங்கமும், எரிவாயு நிறுவனமும் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. 

பசிபிக் கடலின் 'ரிங் ஆப் ஃபயர் ' என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள கினியாவில், ஆண்டுக்கு சராசரியாக 7000 நில நடுக்கங்கள் மற்றும் அதிர்வுகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close