சவூதியில் முதல் முறையாக பெண் துணை அமைச்சர் நியமனம்

  முத்துமாரி   | Last Modified : 28 Feb, 2018 05:42 pm


சவூதியில் முதல் முறையாக பெண் ஒருவர் தொழிலாளர் நலத்துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். 

சவூதி அரேபியாவில் ஒரு காலத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை கூட வழங்கப்படாமல் இருந்தது. கடந்த 2015ம் ஆண்டு தான் அங்கு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. தொடர்ந்து முகமது பின் சல்மான் சவூதியின் மன்னராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு, அவர்கள் தனியாக தொழில் தொடங்க, குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் உயர்கல்வி பயில என அவர்களுக்கான பல உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அவர் அமைச்சரவையில் முதல் முறையாக பெண் ஒருவரை நியமித்துள்ளார். தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று பெண் ஒருவர் சவூதியின் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது முதல்முறையாகும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close