"நாட்கள் எண்ணப்படுகின்றன" - பிரான்ஸ் எம்.பி.க்கு இனவெறி கொலை மிரட்டல்

  PADMA PRIYA   | Last Modified : 01 Mar, 2018 04:31 pm

பிரான்ஸ் நாட்டு எம்.பி.யான லேட்டீடா அவியாவுக்கு நிறவெறியிலானக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் எம்.பி.யான லேட்டீடா அவியாவின் ட்விட்டர் கணக்கில் சிலர் இந்த மிரட்டலை விடுத்துள்ளனர். அதி அவர்கள், ''உனக்கான நாட்களை எண்ணிக்கொள்.  

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு தடித்த கருப்பரை பிரான்ஸ் மக்களிடையே வாழ அனுமதிக்க மாட்டோம். உனது முகம் பார்க்க அருவருப்பாக உள்ளது. பிரான்ஸ் நாட்டுப் பணத்தை வீணாக்காமல் ஆப்பிரிக்காவுக்கே சென்று சேவை செய்யலாம்'' என்று அநாகரீக வார்த்தைகளால் இரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், "உன்னுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் உன்னை நாங்கள் நன்கு கவனித்துக்கொள்வோம் " என்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சைபர் பிரிவில் லேட்டீடா புகார் அளித்துள்ளார். இவருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலுக்கு பலத் தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது மிகவும் மோசமான நிற மற்றும் இனவெறித் தாக்குதல் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெர்ரார்ட் கோலோம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close