சக்தி வாய்ந்த ராணுவம்: இடத்தை தக்க வைத்த இந்தியா

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 06 Mar, 2018 02:45 pm

உலக அளவில் உள்ள நாடுகளில் சக்தி வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட பட்டியலில் இந்திய ராணுவம் 4-வது இடத்தில் உள்ளது.

ஜி.எஃப்.பி எனப்படும் குளோபல் ஃபயர் பவர் (Global Firepower list 2017) என்ற பெயரில் சக்தி வாய்ந்த ராணுவங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவிசார் அம்சங்கள், மனிதசக்தி ஆகிய 50 முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. இந்த பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் ரஷ்யாவும், 3-வது இடத்தில் சீனாவும், 5-வது இடத்தில் பிரான்ஸும்  இந்தியா கடந்த ஆண்டு இருந்த அதே இடத்தை தக்க வைத்துள்ளது. 

இவற்றைத் தொடர்ந்து பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தில் உள்ளது. உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் வடகொரியா, 23-வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close