ஃபேஸ்புக்கின் "அந்த மாதிரி" சர்வேயால் நெட்டிசன்கள் கொதிப்பு

  PADMA PRIYA   | Last Modified : 06 Mar, 2018 08:05 pm


சிறுமிகளிடம் ஆபாசப் படம் அனுப்பச் சொல்லிக் கேட்கலாமா என்று ஃபேஸ்புக் நிறுவனம் தனது சர்வே ஒன்றில் கேட்டிருக்கிறது. இத்தகையை பொறுப்பற்ற கருத்துக் கணிப்பு கேள்விகளால் பலரும் கொதிப்படைந்துள்ளனர். 

ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்தின் மூலமாக நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் ''வயது வந்த ஆண் ஒருவர், 14 வயது சிறுமியிடம் தனது ஆபாசப் படத்தை அனுப்புமாறு தனி மெசேஜிங்கில் கேட்கலாமா?'' என்று கேட்டிருக்கிறது. இதற்கு,

''ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய பதிவுகளை அனுமதிக்கலாம். நான் அப்படங்களைப் பார்ப்பேன்.'',

''ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய பதிவுகளை அனுமதிக்கலாம். ஆனால், அப்படங்களைப் பார்க்க விருப்பம் இல்லை.'', 

''ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய பதிவுகளை அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற பதிவுகளை யாரும் பார்க்காமல் தடுக்க வேண்டும்.'' மற்றும் 

''இது பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை'' என்று நான்கு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன.


இதனால் கொதிப்படைந்த நெட்டிசன்கள் ஃபேஸ்புக் கொஞ்சம் பொறுப்பான முறையில் செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். நெட்டிசன்களின் சாடல்களைத் தொடர்ந்து ஃபேஸ்புக் அந்தக் கேள்வியை நீக்கியுள்ளது. 

இதற்கு பதில் அளித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகி கே ரான்ஸன், ''நாங்கள் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளும் நோக்கத்தோடு தான் இத்தகைய சர்வேக்களை நடத்துகிறோம். ஆனால் இத்தகைய ஏற்க முடியாத விஷயங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. இந்த கேள்வி தவறுதலாகக் கேட்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பில் இடம்பெறக் கூடியக் கேள்வி அல்ல இது''  என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close