ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை திரும்பப் பெற்ற அமெரிக்க அருங்காட்சியகம்

  முத்துமாரி   | Last Modified : 08 Mar, 2018 05:14 pm


மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை திரும்பப் பெறுவதாக அமெரிக்க அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் கடந்த 2012ம் ஆண்டு மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு 'எல்லி வெய்ஸல்' (Elie Wiesel) என்ற 'மனித உரிமைகள்' விருதினை வழங்கி கௌரவித்தது. தற்போது அந்த விருதினை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்து அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது. 

அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஆங் சான் சூகி எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார். ஒரு இனப்படுகொலை நடந்துள்ளதற்கு அந்த நாட்டின் தலைவர் என்ற முறையில் அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. 

மேலும், ரோஹிங்கிய முஸ்லீம்கள் குறித்து கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளர்கள் மீது அடக்குமுறையை அவர்  தலைமையிலான அரசு கையாண்டுள்ளது. இதுபோன்ற சில காரணங்களால் தான் அவருக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close