பிரதமர் ரணிலிடமிருந்து சட்டம்-ஒழுங்கு துறையை பறித்தார் சிறிசேனா

  Sujatha   | Last Modified : 09 Mar, 2018 05:34 am


இலங்கையில் சட்டம் ஒழுங்கு துறையை கவனித்து வந்த பிரதமர் ரணிலிடம் இருந்து அந்த துறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பறித்து, வேறு அமைச்சரிடம் வழங்கினார்.

இலங்கையின் கண்டியில் கடந்த வாரம் சிங்களம் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே கடும் மோதல் நடைபெற்றது. அதன் காரணமாக அந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேலும் வன்முறைகள் நடக்காமல் இருக்க சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில் கலவரத்தை நிறுத்த பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தியில்லாத காரணத்தினால், அவர் வசம் இருந்த சட்டம் ஒழுங்கு துறையை  பறித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. தற்போது இத்துறையை, பொது நிர்வாகம் கவனித்து வரும் அமைச்சர் ரஞ்சித் மத்துவ பண்டாராவிடம் கொடுக்கப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close