பிலிப்பைன்ஸ் அதிபர் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: ஐ.நா மனிதஉரிமை தலைவர்

  SRK   | Last Modified : 09 Mar, 2018 10:02 pm


பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் எடுத்து வரும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே, ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற வேண்டும் என ஐ.நா மனித உரிமை தலைமை தூதர் கூறியுள்ளார்.

தனது அதிரடி நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும், உலக நாடுகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருபவர் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே. போதை மருந்து கடத்துபவர்களை கண்டவுடன் சுட உத்தரவிட்டார். தன் கையாலேயே அவர்களை கொலை செல்வேன் என்று பலமுறை பொதுமக்கள் மத்தியில் கூறியுள்ளார்.

இதுபோன்ற அவரது நடவடிக்கைகளால், பிலிப்பைன்ஸில், நூற்றுக்கணக்கானோர் சட்டப்படி கைது செய்யப்படாமல் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு ஐ.நா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த, ஐ.நாவின் மனித உரிமை நிர்வாகி விக்டோரியா டௌலி கார்பஸ், டுடேர்டேவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆபத்தான கிளர்ச்சியாளர்கள் என்ற பட்டியலை அந்நாடு உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் வழங்கப்பட்ட 600 பேரின் பெயர்களில், விக்டோரியாவின் பெயரை சேர்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால், விக்டோரியாவை  தொடர்ந்து கண்காணிக்க அந்நாட்டு அரசுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை தூதர் ஸெயித் ரா'த் அல் ஹுசேன், "பிலிப்பைன்ஸ் அதிபர் டுடேர்டே ஆதாரமில்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் ஒரு மனநல மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது" என்றும் கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close