உரிமையாளர் இறந்தது தெரியாமல் 4 மாதமாக மருத்துவமனையில் காத்துக் கிடந்த நாய்

  Shalini Chandra Sekar   | Last Modified : 13 Mar, 2018 02:38 pm


உரிமையாளர் இறந்தது தெரியாமல் நான்கு மாதமாக மருத்துவமனை வாசலில் ஒரு நாய்க் காத்துக்கொண்டிருக்கும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த உணர்ச்சி சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. இந்த நாயை வளர்த்து வந்தவருக்கும் வீடு வாசல் எதுவும் கிடையாது. அதனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து வந்திருக்கின்றனர். பிரேசில் தலைநகர் சா போலோவில் உள்ள பூங்காவில், யோரோ மர்ம மனிதன் நாயின் உரிமையாளரை கத்தியால் குத்திவிட, உடனடியாக அவரை, சாண்டா காசா தி நோவோ மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆம்புலன்சில் இவருடன் வந்த நாய், மருத்துவமனை வாசலுடன் நின்று விட்டது. அப்போது அதற்குத் தெரியவில்லை. உள்ளே சென்ற தன் முதலாளி மீண்டும் திரும்பி வரப் போவதில்லை என்று. 


நாட்கள் கடந்தன, முதலாளி வரவே இல்லை. தற்போது அந்த நபர் இறந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், அந்த நாய் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடக்கிறது. அந்த மருத்துமனைக்குச் சென்ற கிரிஸ்டினா என்ற பெண் இதனை கவனித்திருக்கிறார். மக்கள் வரும்போது எழுந்து அமைதியாக நிற்பதும், அவர்கள் சென்ற பின்பு அமைதியாக உட்கார்ந்து கொள்வதுமாக இந்த நாய் இருந்திருக்கிறது. அதன் நடவடிக்கையில் ஈர்க்கப் பட்ட கிரிஸ்டினா, அதற்கு உதவி செய்யும் நோக்கில், விலங்கு நல ஆர்வலர்களுக்கு இந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார். 

அவர்கள் அந்த நாயை மீட்க வந்ததும், அங்கிருந்து தப்பித்து ஓடிய அந்த நாய் மூன்று கி.மீ ஓடி விட்டு மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பியிருக்கிறது. இதன் செயல்பாடுகளைப் பார்த்த மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் தற்போது அந்த நாயைத் தத்தெடுத்திருக்கிறாராம். அந்த நாய்க்கு உணவு, தடுப்பூசி எல்லாம் போட்டு, அதன் ஆரோக்கியத்தை உறுதி செய்திருக்கிறாராம் அந்த நபர். 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close