ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் தூதரகத்தின் மீது தாக்குதல்: 16 பேர் பலி, 80 பேர் காயம்

  PADMA PRIYA   | Last Modified : 03 Mar, 2018 10:28 am

ஆப்பிரிக்காவின் பர்கீனா ஃபாசோ நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு ராணுவ மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். இருத்தரப்பிலும் 8 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் உள்ள பர்கீனா ஃபாசோ தலைநகர் வகாடூகூ-வில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்தின் மீது மர்ம நபர்கள் அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் இரட்டைத் தாக்குதலாக நடந்தது. அங்குள்ள அந்நாட்டின் ராணுவத் தலைமையகத்திலும் திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. தாக்குதலை அடுத்து தொடர்ந்த இருத்தரப்பு துப்பாக்கிச் சண்டையில் 8 பாதுகாப்புப் படையினரும், தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த 8 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் பொதுமக்கள் உள்ளிட்ட 80 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது பயங்கரவாதச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை என்று இது குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜாங் ஈவ் லெ ட்ரியான் என்று கூறினார். எனினும் இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது உடனடியாகத் தெளிவாக கூறப்படவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close