ரஷ்யா: அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது!

  SRK   | Last Modified : 18 Mar, 2018 07:41 am


கடந்த சில நாட்களாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கண்டனங்களுக்கு ரஷ்ய அரசு ஆளான பரபரப்பான சூழ்நிலையில், இன்று அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குபதிவு துவங்கியது. மொத்தம் 11 கோடி ரஷ்ய மக்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்த தேர்தலில் வெற்றி பெற்று 4வது முறையாக அதிபராக பதவியேற்க வைப்பு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 2000 முதல் 2008 வரை அதிபராக இருந்த புடின், அதன்பிறகு, தனக்கு நெருங்கிய டிமிட்ரி மெட்வெடேவை அதிபர் தேர்தலில் நிறுத்தினார். தேர்தலில் வெற்றி பெற்று புடினை பிரதமராக நியமித்தார் மெட்வெடேவ். தொடர்ச்சியாக 3 முறை அதிபராக ஒருவர் இருக்க  முடியாது என்ற அரசியலமைப்பு விதியை தாண்டி, பதவியை தக்க வைத்துக்கொள்ள புடின் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பின், அதிபரின் பதவிக்காலத்தை 4ல் இருந்து 6 வருடமாக உயர்த்திவிட்டு, 2012 அதிபர் தேர்தலில் புடின் நின்று 3வது முறையாக வென்றார்.

தற்போது 4வது முறையாக அதிபராக முயற்சித்து வருகிறார். அவரது ஆட்சிக் காலத்தில், எதிர்கட்சிகளை வளரவிடாமல் செய்ததாகவும், எதிர்கட்சித் தலைவர்களை கைது செய்வதாகவும், சில சமயம் உளவுத்துறையை வைத்து அவர்களை கொலை கூட செய்துள்ளதாகவும் புடின் மீது பல குற்றச் சாட்டுகள் உள்ளன. புடினுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸெய் நவால்னி, இந்த தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. புடினை எதிர்க்க மற்ற சிறிய கட்சிகள் அஞ்சுவதால், இந்த தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் நாட்டில், முன்னாள் ரஷ்ய உளவாளி ரசாயன தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சர்ச்சையால், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நடப்பதால், தேர்தல் உலக அரங்கில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close