கரும்பலகையில் MS Word வரைந்த ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கிய இந்திய நிறுவனம்

  Sujatha   | Last Modified : 19 Mar, 2018 07:41 am


மேற்கு ஆப்பரிக்கா கானாவில் பள்ளி ஆசிரியர் ரிச்சார்ட் அபியாக் அகோடோ என்பவர், பள்ளியில் கணினி இல்லாத காரணத்தினால்   கரும்பலைகையில் மைக்ரோசாப்ட் வோர்ட்(MS Word) எப்படி செயல்படுகிறது என்பதை வரைந்து பாடம் நடத்தினார். இவர் பாடம் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலாக உலகம் முழுவதும் பரவியது. 


இந்நிலையில் இந்திய நிறுவனம் அந்த பள்ளிக்கு  5 கம்ப்யூட்டர்கள், 1 லேப் டாப்  வழங்கி உதவியுள்ளது. இதுகுறித்து அக்ராவில் உள்ள என்ஐஐடியின் தலைமை மேலாளார் அஷிஷ் குமார் கூறியதாவது:- இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை நாங்கள் பார்த்தோம். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விவகாரத்தில் ஆசிரியரின் அர்ப்பணிப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம். ஒரு ஐ.டி. பயிற்சி நிறுவனமாக நாங்கள் பள்ளிக்கு உதவியை செய்ய முடிவு செய்தோம் என கூறினார்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close