ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: 135 உயிரிழப்பு- இயற்கை ஆர்வலர்கள் வேதனை

  PADMA PRIYA   | Last Modified : 24 Mar, 2018 04:18 pm

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேமலின் பே கடற்கரையில் 150 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 135 திமிங்கலங்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களில் 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. உயிரிழந்த ஒட்டுமொத்த திமிங்கலங்களும் அரிய பைலட் வகை ஆகும். இவற்றை நேற்று (வெள்ளிக்கிழமை) காலை கரை ஒதுங்கியிருப்பதை மீனவர்கள் கண்டனர். இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த வன விலங்குகள் துறை அதிகாரிகள், திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு விடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்களில் 15 திமிங்கலங்களை மட்டுமே கடலுக்குள் விட முடிந்தது. மீதமுள்ள 135 திமிங்கலங்களின் உடல்நிலை மோசமாக இருந்ததன் காரணமாக அவற்றை கடலுக்குள் அனுப்ப இயலவில்லை. எனவே, சிறிது நேரத்தில் அந்த திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. அவற்றை கரையோரத்தில் புதைக்கும் நடவடிக்கைளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


<b>நோய்வாய்பட்டதா?</b>

ஹேப் எனப்படும் ஒரு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் திமிங்கலங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கும். அதுதவிர, இரை தேடி முன்னே செல்லும் திமிங்கிலம் வழி தவறினால், அதைப் பின்பற்றிச் செல்லும் திமிங்கிலங்களும் வழி தவறி கரை ஒதுங்கும் என்கின்றனர் கடல் ஆராய்ச்சியாளர்கள். தற்போது திமிங்களங்கள் கரையொதுங்கியதற்கான காரணம் எனினும் ஆராயப்பட வேண்டியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close