ரஷ்யா ஷாப்பிங் மால் தீ விபத்து: 37 பேர் பலி; 40 குழந்தைகளை காணவில்லை

  SRK   | Last Modified : 26 Mar, 2018 08:14 am


ரஷ்யாவின் கெமேரோவோ நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 37 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 40 குழந்தைகள் உட்பட பலரை காணவில்லை. 

திடீரென மேல் தளத்தில் தீ பற்றியதாகவும், அது கணநேரத்தில் கட்டிடத்தின் மற்ற இடங்களுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது. கடைகள் மட்டுமல்லாமல், குழந்தைகள் விளையாடுவதற்கென சில பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் உள்ளது. ஞாயிற்று கிழமை என்பதால், சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் மாலில் இருந்தனர்.

தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்களும், மீட்புப் படையினரும் அங்கு விரைந்தனர். சுமார் 120 பேர் கட்டிடத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 40 குழந்தைகளை உட்பட 70 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close