ரஷ்யா ஷாப்பிங் மால் தீ விபத்து; விசாரணை கோரி மக்கள் போராட்டம்

  SRK   | Last Modified : 27 Mar, 2018 08:23 pm


இரு தினங்களுக்கு முன், ரஷ்யாவின் தெற்கு சைபீரியா பகுதியில், ஷாப்பிங் மால் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ரஷ்ய மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடந்த ஞாயிறு அன்று, ரஷ்யாவின் கெமேரோவோ நகரில், உள்ள ஷாப்பிங் மாலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென மாலின் மேல் தளத்தில் தீப்பிடித்தது. விடுமுறை நாள் என்பதால் பெரும்பாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். வேகமாக தீ பரவியதால் கட்டிடத்தில் பலர் சிக்கினார்கள். இந்த சம்பவத்தில் 64 பேர் உயிரிழந்தனர். அதில் 41 பேர் குழந்தைகள். 

இதுபோன்ற பேரிடர் சமயத்தில் மாலில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற உருவாக்கப்பட்டிருந்த அவசர வெளியேற்ற வழி அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் பலர் கட்டிடத்தின் உள்ளேயே சிக்கி உயிரிழந்தார்கள். இந்த விபத்தை தொடர்ந்து, 3 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். தீவிபத்துக்கு காரணம் நிர்வாக தவறுதான் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், கெமேரோவோ பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவத்துக்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்க உடனடி விசாரணை தேவை என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close