தாய்லாந்து: பேருந்து தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2018 01:44 pm


தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் டபுள்-டக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  நள்ளிரவு 1.30 மணிக்கு தீ விபத்து செய்தி டாக் மாகாணத்தில் வெளியாகியுள்ளது. பாங்காக் அருகில் உள்ள தொழிற்சாலைக்கு அந்த பேருந்து சென்று கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 

இந்த விபத்தில் இருந்து 27 பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவருக்கு பயங்கர தீ காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தீ பிடித்ததற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பேருந்தின் நடுப்பகுதியில் தீ பிடித்ததாகவும், அதனால் முன்பக்கத்தில் இருந்தவர்கள் தப்பித்ததாகவும் பேருந்து ஓட்டுநர் தெரிவித்தார். 

கடந்த 21ந் தேதி, சுற்றுலா பேருந்து ஒன்று மலைப் பகுதியில் கீழ்நோக்கிய சாலையில் சரிந்து விபத்துக்குள்ளானதில், 18 பேர் பலியாகினர். 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்திற்கு மறுநாள், பள்ளி குழந்தைகளுடன் சென்ற சுற்றுலா பேருந்தும் விபத்துக்குள்ளானது. இதில் 39 பேருக்கு காயம் ஏற்பட்டது.

உலகவில் சாலை விபத்துகளில் தாய்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close