ஆப்கானிஸ்தான்: அமெரிக்க விமானதாக்குதலில் 6 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2018 04:51 pm


அமெரிக்கா நடத்திய விமானதாக்குதலில் 6 ஐஎஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர்.

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குணர் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய விமானதாக்குதலில் 6 ஐஎஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. குணர் மாகாணத்தின் செய்தி தொடர்பாளர், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இரண்டு தலைமை தளபதிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டதாக கூறினார். இம்மாகாணத்தில் மறைந்திருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அகற்றவே இந்த விமானதாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து ஐஎஸ் அமைப்பு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. 

கடந்த வாரம் இதே போல் அமெரிக்கா நடத்திய விமானதாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருந்தனர். அமெரிக்க படைகள், ஆப்கான் படைகளுடன் இணைந்து நாட்டில் இருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க விமானதாக்குதலில் ஆப்கானிஸ்தான் முழுவதும் நடத்தி வருகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close