குவைத்தில் இரண்டு பேருந்துகள் மோதல்; இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 01 Apr, 2018 09:55 pm


குவைத்தில் இன்று நடந்த சாலைவிபத்தில் 15க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் இந்தியர்களும் அடங்குவர். 

குவைத் நாட்டில் 'பர்கான் பீல்டு' என்ற இடம் அருகே நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் எதிரெதிர் திசையில் மோதிக்கொண்டன. ஊழியர்கள் பணி முடிந்து திரும்பி செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு பேருந்துகளும் அதிக வேகத்தில் வந்து மோதியதால் பேருந்து நொறுங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இருந்தும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close