ஊழல் குற்றச்சாட்டில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு சிறை

  Padmapriya   | Last Modified : 07 Apr, 2018 12:11 am


தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் குன்-ஹே, பதவியிலிருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 24 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் பெண் அதிபராக இருந்தவர் பார்க் குன் ஹே. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் சுமத்தின. இதனால், அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். அவர் மீதான புகார்கள் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. 

தென் கொரியாவில், பார்க் மேற்கொண்ட ஊழல்  நாட்டையே அதிர வைத்தது. இதனல் அதிகார வர்க்கத்துக்கு மேல் மக்களின் கோபம் பெரும் பிரச்னையாக வெளிபட்டது. எனவே, இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

பார்க் இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கவில்லை என்பதுடன், முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றம் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

பரபரப்பு தீர்ப்பு வழங்கிய அந்நாட்டு நீதிமன்ற நீதிபதி கிம் சே-யோன், "முறைகேடுகள் மூலம் நாட்டில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார் பார்க். ஆனால், செய்த குற்றத்திற்கு துளி அளவு வருந்துவதற்கான அடையாளம் கூட பார்க்கிடம் தென்படவில்லை" என்று கூறி, பார்க்கின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close