பல் துலக்கும்போது ப்ரஷை விழுங்கிய மனிதர்

  Padmapriya   | Last Modified : 08 Apr, 2018 06:14 pm

கென்யாவில் துலக்கும் போது ப்ரஷை ஒருவர் விழுங்கிய வேடிக்கை சம்பவம் நடந்துள்ளது.

கென்யாவைச் சேர்ந்தவர் டேவிட் கேரோ (32). இவர் பல் துலக்கும்போது தவறுதலாக டூத் ப்ரஷ்ஷையே விழுங்கி இருக்கிறார். அது அவரது உணவுக் குழாயில் சிக்கி அவரைப் படாதபாடு படுத்தியுள்ளது. கடுமையான வலி ஏற்படவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களுக்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்து, பிரஷ்ஷை எடுக்க முயற்சித்தனர். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை.

பின்னர் சுமார் 45 நிமிட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த ப்ரஷ்ஷை வெளியே எடுத்தனர். அறுவைசிகிச்சை காரணமாக,  சிறிது காலம் திரவ உணவு மட்டுமே உண்ண வேண்டும் கூறியுள்ளனர். தற்போது உடல் நலம் தேறிவருகிறார் டேவிட். இனி பிரஷ் செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பேன் என்று மருத்துவர்களிடம் சத்தியமே செய்துள்ளாராம்.

என்ன நடந்தது என்று தெரியவில்லை. பிரஷ் செய்துகொண்டே இருந்தேன். திடீரென்று தவறுதலாக விழுங்கிவிட்டேன். எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் என் அருகில் கூட யாரும் இல்லை என்று புலம்புகிறார் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான டேவிட்.

அவ்வளவு பெரிய பிரஷ்ஷை தவறுதலாக விழுங்குவது என்பது சாத்தியமே இல்லை. என்ன நடந்தது, என் பிரஷ்ஷை விழுங்கினார் டேவிட் என்பதை அவராகவே சொன்னால்தான் தெரியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close