தான்சானியா: வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி

  Sujatha   | Last Modified : 17 Apr, 2018 06:31 am


தான்ஸானியா நாட்டின் தார் ஏஸ் ஸலாம் நகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.

50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட கடற்கரை நகரமான தார் ஏஸ் ஸலாம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் . சாலைகளில் பெருக்கு ஏற்பட்டு வணிக வளாகங்கள், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இது வரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் வீடுகளின் மேற்கூரையில் தங்கியுள்ளனர்.

தொடர்ந்து கொட்டி தீர்க்கும் மழையின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முறையான வடிகால வசதி அமைக்காததே இந்த வெள்ளத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் வரும் மே மாதம் வரை இங்கு பலத்த மழைக்கு வாய்பபு இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close