35 ஆண்டுக்குப் பிறகு சவூதியில் சினிமா தியேட்டர் திறப்பு!

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2018 12:46 pm


சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சவூதி அரேபியாவில் தியேட்டரில் சினிமாப்படம் திரையிடப்பட்டுள்ளது. 

சவூதி அரேபியாவில் இஸ்லாமிய மத கட்டுப்பாடுகளை மீறுவதாகக் கூறி, 1970 கால கட்டத்திலேயே சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் சவூதியின் இளவரசராக முகமது பின் சல்மான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அந்நாட்டின் கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண்களை பொது இடங்களுக்கு அனுமதிப்பது, வாகனம் ஓட்டுவது, தொழில் தொடங்க அனுமதி என பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.


இதையடுத்து சவூதியில் முதல் முறையாக 1970ம் ஆண்டு காலகட்டத்திற்கு பிறகு தற்போது தியேட்டரில் படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஏப்ரல்.18) தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் 'பிளாக் பாந்தர்' (Black Panther) படம் திரையிடப்பட்டது. இதனை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் கண்டுகளித்தனர்.

இன்று முதல் பொதுமக்களுக்கு பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. இதற்காக நேற்று முதல் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது. இன்று சவூதியின் பல்வேறு இடங்களில் படம் திரையிடப்பட்டதையடுத்து, பொதுமக்களும் பார்த்து ரசித்தனர். இந்த படத்தில் இருந்த முத்தக்காட்சிகளை 'கட்' செய்து திரையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.