நேபாள்: ஓடுபாதையை விட்டு விலகிச்சென்ற விமானம்

  Sujatha   | Last Modified : 21 Apr, 2018 08:56 am


நேபாளத்திலிருந்து மலேசியா செல்லும்  விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து  கோலாலம்பூருக்கு செல்ல இருந்த மலேசியாவின் மெலிண்டா ஏர் பயணிகள் விமானம் புறப்படுகையில் ஓடுபாதையில் சறுக்கி புல்தரையில் சென்றது. இதனால் விமானத்தின் டயர் மண்ணிற்குள் மாட்டிக்கொண்டது. விமானத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்ட விமானி, சரியான நேரத்தில் விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் விமான ஊழியர்கள் உட்பட 139 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

இந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து ஓடுதளம் 12 மணி நேரம் முடங்கியது. சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.  இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். 

இது தொடர்பாக விமான நிலையத்தின் பொது மேலாளர்  கூறியது,"விமானி அறையின் திரையில் ஒரு தவறு நேர்ந்து இருப்பதை விமானி கடைசி நிமிடத்தில் பார்த்து உள்ளார். அதைத் தொடர்ந்து அவர் விமானத்தின் புறப்பாட்டை பாதியில் நிறுத்தியதுதான் விமானம், ஓடுதளத்தில் இருந்து சறுக்கி சிறிது நேரம் சென்று சேற்றில் சிக்கியதற்கு காரணம் ஆகும்" என்று குறிப்பிட்டார். சீரமைப்பு பணி முடிவடைந்த பின் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close