உலகிலேயே மிக வயதான பெண் காலமானார்

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2018 05:46 pm

உலகிலேயே வயதான ஜப்பானிய மூதாட்டி நபி தஜிமா காலமானார். அவருக்கு வயது 117.

உலகின் அதிக வயதான மூதாட்டி என்று உலக சாதனைகளை பதிவு செய்துவரும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருந்தவர் நபி தஜிமா.

ஜப்பான் நாட்டை சேர்ந்த இவர் 1900ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தார். 19-ம் நூற்றாண்டில் பிறந்து உயிருடன் இருக்கும் ஒரே நபராக கருதப்பட்ட இவருக்கு மகன்கள் மற்றும் மகள்கள் மூலம் பிறந்த 160 வாரிசுகள் உள்ளனர்.

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிக்காய் நகரில் வாழ்ந்துவந்த நபி தஜிமா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நபி தஜிமா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இன்று அறிவித்துள்ளனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.