3 வயது குழந்தையை இரவு முழுவதும் புதரில் பாதுகாத்த நாய்

  Padmapriya   | Last Modified : 24 Apr, 2018 10:59 am

ஆஸ்திரேலியாவில் முள் புதரில் சிக்கிய 3 வயது குழந்தையை இரவு முழுவதும் அருகே இருந்து பாதுகாத்த நாய்க்கு காவல்துறை சிறப்பு மரியாதை வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில், ஆரோரா என்ற பெண் குழந்தை வீட்டின் வெளியே விளையாட சென்றாள். அப்போது, சரியாக காது கேட்காத, கண் குறைபாடு கொண்ட அரோராவின் வீட்டு நாயான மேக்ஸ், அவளை பின் தொடா்ந்து சென்றது. குழந்தை வீடு திரும்பாததையடுத்து அவளது தாத்தா, பாட்டி தேடத் தொடங்கினா்.

தங்களின் வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டா் தூரத்தில் உள்ள மலைப்பகுதியில் இருந்து ஆரோரா கத்தியதை கேட்டதாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார். "நான் மலையை நோக்கி கத்திக் கொண்டே சென்றேன். மலையின் உச்சியை அடைந்தவுடன் அங்கு வந்த நாய், ஆரோரா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றது." என்றார் அவர்.

வெள்ளி இரவு காணாமல் போன குழந்தையை சனிக்கிழமை காலை ஒரு கண்டுபிடிக்கும் வரை (சுமார் 16 மணி நேரம்), குழந்தையுடன் நாய் தங்கியுள்ளது. 


அன்று இரவு வெப்ப நிலை 10 டிகிரி வரை குறைந்தபோதும் கூட, அரோராவை விட்டு நகராமல் மேக்ஸ் அங்கேயே இருந்ததாக உறவினா்கள் தெரிவித்துள்ளனா். குழந்தையை தேடுவதற்கான பணியில் அக்கம்பக்கத்தினர், தன்னார்வலர்ககள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனா். 

அவர்கள் அனைவரும் மேக்ஸின் வீரச்செயலை கண்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர். காவல் துறையினா் மேக்ஸுக்கு 'கவுரவ போலீஸ் நாய்' என்று பட்டம் வழங்கியுள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.