கிம் ஜாங் பேசும்போது தூங்கிய ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை?

  Padmapriya   | Last Modified : 25 Apr, 2018 09:29 pm

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது தூங்கிய மூத்த ராணுவ தலைவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணு ஆயுத சோதனையை வடகொரியா இனி நடத்தாது என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அறிவித்திருந்தார். இது குறித்து வட கொரிய அதிபர் கிம் ஜோங் அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மூத்த முக்கிய ராணுவ தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே கிம் ஜாங் உரையாற்றி கொண்டிருந்த போது மூத்த ராணுவ தலைவரான ரி மவுங் சூ (84) தலையை குனிந்தவாறு தூங்கியுள்ளார்.

இதனால், அந்த அதிகாரிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டில் பேசப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன்னர் அந்நாட்டின் துணை பிரதமர் கிம் யங் ஜின் இது போன்ற முக்கிய கூட்டத்தின் போது தூங்கியதால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதே போல மேலும் சிலருக்கும் அங்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு புறம் ரி மவுங் சூ வயது முதிர்வு காரணமாக அசதியில் தூங்கியிருக்கலாம் எனவும் அதனால் மரண தண்டனை வழங்கப்படாமல் மன்னிக்கப்படலாம் அல்லது பரிசீலனை செய்யலாம் எனவும் பரவலாக பேசப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close