65 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொரிய அதிபர்கள் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2018 11:24 am


உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் வடகொரிய- தென்கொரிய அதிபர்களுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

பல்வேறு எதிர்ப்புகளை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இதனால் தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் போர் பதற்றம் நிலவி வந்தது. தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்ததால் ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளை விதித்தன.

இவ்வாறாக போர் மூளும் சூழ்நிலையில் இருந்த வடகொரியா திடீரென தென் கொரியாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. வடகொரிய அதிபரின் சகோதரியும் இந்த ஒலிம்பிக் தொடருக்கு சிறப்பு விருந்தினராக சென்று வந்தார். அடுத்த நிகழ்வாக தென்கொரிய நாட்டின் பிரதிநிதிகள் வடகொரியாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்தே ஏப்ரல் 27ம் தேதி இருநாட்டுக்கும் பொதுவான எல்லையான பான்முன்ஜோமில் இரண்டு நாட்டு தலைவர்களும் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று  காலை 10.30 மணி அளவில் மாநாட்டில் கலந்துகொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென்கொரியாவிற்கு சென்றார். இவரை தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் வரவேற்றார். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு இதன் மூலம் மேம்படும் என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும் இந்த மாநாட்டில் அணு ஆயுத குறைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 65 ஆண்டுகளுக்கு பிறகு கொரிய அதிபர்களின் சந்திப்பு இன்று நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close