உலகின் மிக ஆழமான கடல் பகுதியிலும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்டுபிடிப்பு!

Last Modified : 11 May, 2018 08:21 pm

உலகில் மிக ஆழமான கடல் பகுதி என கருதப்படும் மரியானா டிரெஞ்ச்சில், பிளாஸ்டிக் பைகள் குப்பைகளாக குவிந்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பசிபிக் பெருங்கடலில் உள்ள உலகின் மிக ஆழமான பகுதியாக மரியானா டிரெஞ்ச் பகுதி கருதப்படுகிறது. இங்கு பல கட்ட கடல் ஆராய்ச்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அப்போது, கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளாக குவிந்து இருப்பதை ஜப்பான் ஆய்வுக் குழு கண்டுபிடுத்துள்ளது.

இவை அனைத்துமே மனிதர்களால் பரப்பப்பட்டவை எனவும் அந்தக் குழுவினர் கூறியுள்ளனர்.

கடலுக்குள் 36 ஆயிரம் அடி ஆழத்தில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் கிடந்தது ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு இடையே, உலகின் மிக ஆழமான கடல் பகுதியில் வாழும் ஆக்டோபஸ் உள்ளிட்ட பல ஆழ்கடல் உயிரினங்களும் நுண்ணுயிரினங்களும் வாழ்ந்து கொண்டிருப்பதும் ஆய்வாளர்களை கவலையடைய செய்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close