ஸ்விஸ் அரசின் உதவியால் உயிர் துறந்த 104 வயது விஞ்ஞானி!

  Padmapriya   | Last Modified : 11 May, 2018 04:13 pm

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய 104 வயது விஞ்ஞானி டேவிட் குட்ஆல், ஸ்விட்சர்லாந்து சட்ட உதவியுடன் கருணைக் கொலை செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் சூழலியல் துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டேவிட் குட்ஆல் (வயது 104).  வயது முதிர்ந்த நிலையில் இவரை கவனிக்க சொந்தங்கள் இல்லை.  நோய்களால் எந்த பாதிப்புக்கும் ஆளாகாத இவருக்கு, வாழ்க்கைத்தரம் மட்டும் இனிமையானதாக இல்லை. எனவே தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விஞ்ஞானி டேவிட் குட்ஆல் விரும்பினார். 

எனவே, தன்னை கருணைக் கொலை செய்துவிடம்படி அல்லது தற்கொலைக்கு உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு ஆஸ்திரேலிய சட்டம் வழிவகுக்கவில்லை. எனவே டேவிட்டின் கோரிக்கை மறுக்கப்பட்டது. 

அதே நேரம் ஸ்விட்சர்லாந்தில், நீண்ட காலமாக தானாகவே இறக்கும் கோரிக்கையை எவரேனும் கொண்டிருந்தால், அவரது தற்கொலைக்கு உதவுவது சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுகிறது. எனவே டேவிட் குட்ஆல், ஸ்விட்சர்லாந்துக்கு சென்றார். அவரது அமைதியான மரணத்துக்கு உதவ முன்வந்த எக்சிட் இன்டர்நேஷனல் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம், அவரது ஸ்விட்சர்லாந்து பயணத்துக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தது.

அதன்படி ஸ்விட்சர்லாந்து சென்ற அவர், பசல் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று (வியாழக்கிழமை) காலை விஷ ஊசி செலுத்தி கருணைக் கொலை செய்யப்பட்டார். பின், அவர் அமைதியாக மரணித்ததாக எக்சிட் அமைப்பின் நிறுவனர் பிலிக் நிட்ஸ்கி செய்திக்குறிப்பை வெள்யிட்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் குட்ஆல், தனது வாழ்வை முடித்துக்கொள்ள ஆர்வமாய் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவிலேயே இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறினார். இனி மேலாவது இத்தகைய நடவடிக்கைக்கு அனுமதிப்பது குறித்து ஆஸ்திரேலியாவும், பிற நாடுகளும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.