ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொலை

  முத்துமாரி   | Last Modified : 12 May, 2018 10:27 am


ஆஸ்திரேலியாவில் மார்க்கரெட் நதி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் தென்மேற்கே மார்க்கரெட் நதி அருகே  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதில் 4 குழந்தைகள், குழந்தைகளின் தாய், பாட்டி, தாத்தா ஆகியோர் இறந்தனர். அப்பகுதியில் இருந்து காவல்துறைக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளதையடுத்து காவல்துறை அங்கு சென்று உடல்களை கைப்பற்றியுள்ளது. 7 பேரின் உடல்களிலும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்துள்ளன. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதையும் காவல்துறை உறுதி செய்துள்ளது.  


பெரும்பாலாக இது தற்கொலையாக தெரியவில்லை. கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் நடைபெறாத அளவுக்கு மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close