அணுஆயுத சோதனை மையத்தை அகற்றும் வட கொரியா: ட்ரம்ப் நன்றி

  Padmapriya   | Last Modified : 13 May, 2018 06:59 pm

அணு ஆயுத சோதனை மையத்தை அகற்றும் வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். 

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்  ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யேரி பகுதியில் அந்நாட்டு அணுகுண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், ரகசிய சுரங்கங்களையும் 23ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் அகற்றி விட அரசு முடிவெடுத்துள்ளது. 

மேலும் அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், பாதுகாப்பு சாவடிகளும் முற்றிலுமாக அகற்றப்படும் எனவும் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அணுகுண்டு சோதனை மையத்தை அகற்றும் வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் ட்வீட்டில், ''எங்கள் சந்திப்பு நடப்பதற்கு முன்னதாகவே அணுகுண்டு சோதனை மையத்தை அகற்ற போவதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த உறுதியான நடவடிக்கைக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார். 

இதயும் கொஞ்சம் படிங்க..... 

வட கொரியா அணு ஆயுத சோதனையை தவிர்ப்பதின் உண்மைப் பின்னணி!


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close