இந்தோனேசியாவில் 4வது குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 12:35 pm


இந்தோனேசியாவில் இன்று அதிகாலை காவல்துறை தலைமையகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு காவலர் உயிரிழந்தார். 

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா என்ற நகரத்தில் உள்ள 3 தேவாலயங்களில் நேற்று(மே.13) குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் அதிகம் கூடியுள்ள சமயத்தில் தேவாலயத்தில் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் உள்ள குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த தாக்குதலில் 11 பேர் வரை கொல்லப்பட்டனர். மேலும் 45 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள காவல்துறை தலைமையகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்தான். இதில் காவலர் ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே நேற்றைய தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


காவல்துறை, இந்த சம்பவம் குறித்து விசாரித்ததில், அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் நிகழ்த்தியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கடைசியாக தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளையும் இதில் ஈடுபடச் செய்துள்ளனர். ஒரு குழந்தை இறந்த நிலையில், மற்ற 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நான்கு தாக்குதலிலும் தீவிரவாதிகள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close