மலையை நகர்த்தும் வல்லமை: வடகொரிய முன்னாள் தூதர் அதிர்ச்சி தகவல்!

  Padmapriya   | Last Modified : 17 May, 2018 11:19 am

வட கொரியா தன் வசம் உள்ள அணுஆயுதத்தை முற்றிலுமாக கைவிடும் வாய்ப்பே இல்லை என்றும் அது உலக நாடுகள் நினைக்கும் அளவையும் தாண்டி திறன் கொண்டிருப்பதாகவும் பிரிட்டனுக்கான வட கொரியாவின் முன்னாள் தூதர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். 

வடகொரியா வசம் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பிரமிக்கத்தக்க சில தகவல்களை பிரிட்டனுக்கான வடகொரிய தூதராக இருந்த தே யங் ஹோ வெளியிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

"ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்காவின் லிட்டில் பாய், பேட்மேன் அணுகுண்டை விட 10 மடங்கு வலிமையான குண்டுகளை வட கொரியா வைத்துள்ளது. அதோடு ஒரு மிகப் பெரும் மலையையே நகர்த்தும் அளவுக்கு இந்த அணுகுண்டுக்கு ஆற்றல் உள்ளது"  என்று தே யங்  ஹோ கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வடகொரியா தனது அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடாது எனத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. 

அணு ஆயுத ஒழிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வருகிற 12ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. இது இரு நாடுகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக வரும் 25ம் தேதிக்குள் அணு ஆயுத சோதனை மையத்தை முற்றிலும் கலைக்கப்போவதாகவும் வடகொரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் கொஞ்சம் படிங்க... 

வட கொரியா அணு ஆயுத சோதனையை தவிர்ப்பதின் உண்மைப் பின்னணி!


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close