வட கொரியாவுக்கு மத்திய அமைச்சர் சர்ப்ரைஸ் விசிட்!

  Padmapriya   | Last Modified : 17 May, 2018 06:22 pm

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே சிங் திடீர் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான சந்திப்பு நடந்துள்ளது. 

வட கொரியா அணுஆயுத பயன்பாட்டை கைவிட்டு மற்ற நாடுகளுடன் இணக்கமாக இருக்கக் கூடிய ஆலோசனைகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக தென்கொரியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தது வட கொரியா. 

இதன் பின்னர், அடுத்த மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சிங்கப்பூரில் சந்திக்க உள்ளனர். இந்த நிலையில், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே சிங் நேற்று முன் தினம் திடீரென முன்னறிவிப்பு இன்றி அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றுள்ளார்.

அந்நாட்டு துணை அதிபர் கிம் யோங் டேய் மற்றும் வெளியுறவு, கலாச்சார துறை அமைச்சர்களை வி.கே சிங் சந்தித்துள்ளார்.  இரு நாட்டு அரசியல் சூழல், பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அப்போது வடகொரியாவுக்கு பாகிஸ்தானுடன் உள்ள அணு ஆயுத உறவு குறித்து வி.கே சிங் தனது கவலையை தெரிவித்தார். கடந்த திங்கள் அன்று வடகொரியாவுக்கான இந்திய தூதராக அதுல் கோட்சர்வ் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற 2 நாட்களில் இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பை அவர் நடத்த முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். கடைசியாக கடந்த 1998-ம் ஆண்டு இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பு நடந்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close