மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம்; 23 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 18 May, 2018 12:18 pm


மேற்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. மே மாதத்தில் மட்டும் இந்த வைரஸ் தாக்குதலில் 23 பேர் பலியாகியுள்ளனர். 

விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் எபோலா வைரஸ் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் கொடூர நோய் ஆகும். மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா, சியர்ரா லியோன், கினியா மற்றும் நைஜீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 1200 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் மே மாத தொடக்கத்தில் இந்த நோய் பரவியுள்ளதாக செய்தி வெளியானது. பண்டகா என்ற இடத்திற்கு அருகே உள்ள கிராமத்தில் இந்த எபோலா வைரஸ் தாக்குதல் இருந்ததாக வந்த தகவலையடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


அதன்படி, எபோலா வைரஸால் 23 பேர் பலியாகியுள்ளனர் எனவும் மேலும், அங்குள்ள 44 பேருக்கு எபோலா இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து உலக சுகாதார நிறுவனமும் இதனை உறுதி செய்துள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க  உலக சுகாதார  நிறுவனம் ஆணையிட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் அவசர நிலையை பிரகடனப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

எபோலா வைரஸ் தாக்குதலினால் முதலில் காய்ச்சல், தலைவலி, நெஞ்சுவலி, தசை வலி ஏற்படும், தொடர்ந்து ரத்தம் வெளியேறுதல், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். 90% வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மரணத்தை தான் சந்திக்க வேண்டும் என்பது மருத்துவ ஆய்வாளர்கள் கருத்து. தற்போது காங்கோவில் எபோலா தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான அளவுக்கு தடுப்பூசி மருந்துகளை அளித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close