மும்பை தாக்குதல் பயங்கரவாதிக்கு பாகிஸ்தான் மீண்டும் பாதுகாப்பு

Last Modified : 20 May, 2018 03:30 pm

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் மீண்டும் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

26/11 மும்பை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா.வும், அமெரிக்காவும் அறிவித்தது. 

ஹபீஸ் சயீதின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்துள்ளது. உலக நாடுகளின் நிர்பந்தம் காரணமாக லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. 

பின்னர் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில், ஹபீஸ் சயீத்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டார். 

லஷ்கர், ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், அதனைத் தொடர்ந்து மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை தொடங்கினார். சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுவதையும் புதிதாக அரசியல் கட்சி அலுவலகம் திறந்திருப்பதையும் மேற்கத்திய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் சயீதுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறபட்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் ஷேபாஸ் ஷெரீப் பிறப்பித்துள்ளார். இவர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close