எச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை: அமெரிக்கா தெரிவிப்பு

Last Modified : 20 May, 2018 05:22 pm

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த விசாவை வைத்திருக்கும் துணைவர்களுக்கு பணி அனுமதி வழங்குவது தொடர வேண்டும் என்று அமெரிக்க அரசிடம், அந்த நாட்டின் 130 எம்.பி.க்கள் கடந்த வாரம் முறையீடு செய்தனர். 

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்கிறவர்களுக்கு எச்–1பி விசா வழங்கப்படுகிறது. அந்த விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு எச்–4 விசா கொடுத்து, அங்கேயே வேலை பார்க்கும் திட்டத்தை ஒபாமா அதிபராக இருந்தபோது கொண்டு வந்தார்.

அதை நீக்கிவிட தற்போதைய ட்ரம்ப்பின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பெருமளவில் இந்தியர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உருவாகி உள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிலிப் ஸ்மித், அளித்த பேட்டியில், "சட்டம் இயற்றுகிற நடைமுறை முடிகிற வரையில், எச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாது. அமெரிக்காவில் அமெரிக்கர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற அதிபரின் உத்தரவை அமல்படுத்தும் விதத்தில், நிறைய கொள்கைகள், ஒழுங்குமுறைகள் மாற்றப்பட உள்ளன. அதில் வேலை வாய்ப்பு அடிப்படையில் விசா வழங்கும் திட்டமும் அடங்கும்" என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 90% இந்தியர்கள். எனவே இந்த விவகாரத்தால் அதிகம் பாதிக்கக் கூடியவர்கள் இந்தியர்கள் தான். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close