• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

LG குழுமத் தலைவர் காலமானார்!

  Padmapriya   | Last Modified : 21 May, 2018 12:58 pm

டி.வி, ஏ.சி என வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் எல்.ஜி குழுமத்தின் தலைவர், கூ போன் (73) ஞாயிறு அன்று காலமானார்.

தென் கொரியாவின் பிரபல நிறுவனமான, எல்.ஜி.,யின் தலைவராக இருந்தவர், கூ போன் (Koo Bon-moo). இவர், எல்.ஜி., குழுமத்தில், 18 ஆண்டுகளுக்கும் மேல், உயர் பதவியை வகித்துள்ளார். இவரது பணிக் காலத்தில், எல்.ஜி., குழுமம் பன்மடங்கு வளர்ச்சி அடைந்தது. 

இவர், சமீபத்தில், உடல் நலக் குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று (ஞாயிறு) காலமானார். கூவிற்கு கடந்த வாரம் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் கருவிகளின் உதவியுடன் வாழ்நாளை நீட்டிக்க அவர் மறுப்பு தெரிவித்திருந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. 'கூ போனின், தத்து மகனான, கூ குவாங்மோ, 40, இனி, எல்.ஜி., குழுமத்தின் தலைமை பொறுப்பை கவனிப்பார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஜி. நிறுவனத்தை கூ போனின் தாத்தா, கூ இன் ஹ்வாய் (Koo In-Hwoi) 1947ல் ஆரம்பித்தார். பின் அதன் வர்த்தகத்தை மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்திய பெருமை கூ போனையேச் சேரும்.

பலவிதமான மின் பொருட்கள், திரைகள், ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பிற்குப் பெயர்போனது எல்.ஜி குழுமம். கூவின் 20 ஆண்டுத் தலைமைத்துவத்தின்கீழ், குழுமத்தின் விற்பனை அதிவேகமாக அதிகரித்தது. 1994ம் ஆண்டு 30 டிரில்லியனாக இருந்த விற்பனை மதிப்பு, சென்ற ஆண்டு 160 டிரில்லியனாகப் பதிவானது தொழில்த்துறையில் மிக அபாரமான முன்னேற்றமாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close