21 வயதில் பலத்காரம்... ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

  Padmapriya   | Last Modified : 21 May, 2018 04:35 pm

21 வயதில் ஹார்வி வெய்ன்ஸ்டைன் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்டோ கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட்  திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது தொடர்ந்து பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தனக்கு அவர் தொல்லை கொடுத்ததாக முதன்முதலில், ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், சல்மா ஹாயாக், உள்பட பல நடிகைகள்  குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசிய இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்டோ, ஹார்வி வெய்ன்ஸ்டைன் தனது 21வது வயதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

ஆசியா பேசும்போது, "1997ம் ஆண்டில், கேன்ஸ் திருவிழாவுக்கு வந்தபோது, வெய்ன்ஸ்டைன் என்னை பாலியல் வன்புணர்வு செய்ததார். சக்திவாய்ந்த ஹாலிவுட் தயாரிப்பாளரான அவர் பிரான்ஸ் ஓட்டலில் வைத்து என்னை தவறான உறவுக்கு  கட்டாயப்படுத்தினார். எங்களுக்கு தெரியும் நீ யார் என்று. இந்த கேன்ஸ் விழாவுக்கு முன் வரை தான் நீ ஒரு சக்தி வாய்ந்த தயாரிப்பாளர். 


எனக்கு முன்னால் நிறைய பேரை அவர் நாசப்படுத்தியது எனக்கு தெரியும். அதே போல் எனது கதையும், அது 21 வயதில் நடந்தது. அவற்றில் சில பழைய  கதை. அவை வெளியே வரவில்லை. அது பற்றி கூறும் போது எனது உடல் நடுங்குகிறது" என மிகவும் உணர்ச்சி பொங்க ஆவேசமாக பேசினார். 

ஹார்வி வெய்ன்ஸ்டைன் பற்றி  ஏஞ்சலினா ஜூலி மனம் திறந்து பேசியதை தொடர்ந்து #MeToo என்ற ஹேஷ்டாகில் பலரும் தாங்கள் வன்புணர்வால் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக கூற ஆரம்பித்தனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் கடைசி நாள் நிகழ்ச்சியின்போது 42 வயதான நடிகை ஆசியா அர்ஜெண்டோ தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டது மிகவும் அசாத்தியமானது என்றும் அவர் நிகழ்த்தியது மிகவும் சக்திவாய்ந்த உரை என்று பலரும் பாராட்டி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close