அணு ஆயுத பரிசோதனை தளத்தை நிர்மூலமாக்கிய வடகொரியா - வீடியோ

  Padmapriya   | Last Modified : 26 May, 2018 12:38 pm

புங்யே-ரி அணுஆயுத சோதனை மையம்; 23ம் தேதி செயற்கைகோள் படம். 

தனது மிகபெரும் ஒரே ஒரு புங்யே-ரி பகுதியில் இருந்த அணு ஆயுத பரிசோதனை மையத்தை வடகொரியா அரசு நிர்மூலமாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மலையை தகர்க்க வல்ல, மலையைக் கூட நகர்த்தி இடம்பெயர்க்க கூடிய, கண்டம் விட்டு கண்டம் தாக்கக் கூடிய அளவு சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை வைத்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து உலகை மிரட்டிவந்த வடகொரியா, தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணுகுண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்ட ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்தது.

இதைதொடர்ந்து, அணுஆயுதப் பரிசோதனை மையம் தகர்க்கப்படுவதை நேரில் வந்து பார்க்குமாறு உலகின் முக்கிய ஊடகங்களுக்கு வட கொரியா அரசு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று அந்த இடமும், சுரங்கங்களும் தகர்க்கப்பட்ட காட்சிகளை சில ஊடகங்கள் யூடியூபில் வெளியிட்டுள்ளன. 

கூறியபடி தனது அணுஆயுத பரிசோதனை மையத்தை நிர்மூலமாக்கியுள்ளது.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை ரத்தான சூழலிலும் இதனை நிறைவேற்றியுள்ளது. 

இதையும் கொஞ்சம் படியுங்க.....

வட கொரியா அணு ஆயுத சோதனையை தவிர்ப்பதின் உண்மைப் பின்னணி!தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close