ஒரே நாளில் வெளியே வந்தார் நடிகைகளிடம் அத்துமீறிய ஹார்வே!

  Padmapriya   | Last Modified : 26 May, 2018 03:26 pm

ஹாலிவுட்டில் பல நடிகைகளின் வன்புணர்வு புகாரினால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் நியூயார்க் போலீஸிடம் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

பிரபல ஹாலிவுட்  திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் (60). இவர் மீது தொடர்ந்து பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், சல்மா ஹாயாக், உள்பட பல நடிகைகள்  குற்றம்சாட்டினர்.

சமீபத்தில்  நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசிய இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்டா கூட  அவர் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.  கேன்ஸ் விழாவில் இந்தப் பிரச்னைக்காக போராட்டமும் நடத்தப்பட்டது.

ஹார்வி மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் அவர் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தன் மீதான பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பாக ஹார்வே வெயின்ஸ்டீன், நியூயார்க் போலீஸாரிடம் தானே வந்து சரணடைந்தார். பின்னர் பிணையின் அடிப்படையில் அவருக்கு இன்று (சனிக்கிழமை) ஜாமீன் வழங்கப்பட்டது. 

#MeToo movement என்ற ஹேஷ்டேக் மூலம் பல ஹாலிவுட் பிரபல நடிகைகள் தாங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக பதிவுகளை வெளியிட்டனர். இதை பின்பற்றி நம் ஊர் கோலிவுட் வரை நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த சோகத்தை பகிர்ந்தனர்.

ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் ஹார்வே, எதிர்பாலினத்தவர்களின் சம்மதத்துடன் அவர்களுடன் உறவு வைத்துகொண்டதாகவும், நான் யாரையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close