ஏமனில் சூறாவளிக்கு 3 இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி!

Last Modified : 28 May, 2018 03:07 pm

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், 'மேகுனு' என்ற புயல் கரையைக் கடந்ததில், 3 இந்தியர்கள் உட்பட, 11 பேர் பலியாகினர்.

அரபிக்கடலில் உருவான மேகுனு புயல் தீவிர மடைந்து, ஏமனின், சொகோட்ரா தீவை நேற்று தாக்கியது. அப்போது, கடும் சூறாவளிக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதைத் தொடர்ந்து, ஓமனின் சில பகுதிகளையும் தாக்கி, கரையைக் கடந்தது. இதனால், ஓமனின் மூன்றாவது பெரிய நகரமான, சலாலாவில், மணிக்கு, 170 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதுடன், கன மழை கொட்டித் தீர்த்தது. அதாவது 3 வருடத்துக்கு அங்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த புயல் காரணமாக, ஏமன் மற்றும் ஓமனில், 3 இந்தியர்கள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு காரணமாக மின் இணைப்பு, தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close