பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 4-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர்மேன் போல தாவி ஏறி காப்பாற்றிய மாலியைச் சேர்ந்த இளைஞருக்கு அந்நாட்டு குடியுரிமையும் அரசு வேலையும் வழங்கி பிரான்ஸ் கவுரவித்துள்ளது.
பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் கடந்த சனிக்கிழமை ஒரு குழந்தை அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. குழந்தையை தாய் தந்தையிடம் அளித்துவிட்டு வெளியூருக்கு பணிக்காக செல்ல இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் கண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து சேரவில்லை. அப்போது மாலியைச் சேர்ந்த மமூது கசாமா (22) அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் அகதியாக பிரான்ஸில் குடியேறியவர்.
குழந்தையின் அழுகை குரலை கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் வெறும் கரங்களால் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி சுவரை தாவிப் பிடித்து ஏறினார். சில நிமிடங்களில் 4-வது மாடிக்கு சென்ற அவர் குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்களும் பால்கனி வழியாக குழந்தை தொங்கிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். நீண்ட பதற்றத்துக்குப் பிறகு குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியது. இந்த நிலையில், மாலி நாட்டு இளைஞருக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பாராட்டுகளை தெரிவித்தார். கசாமாவை நேரில் சந்தித்த மேக்ரான், அவருக்கு நிரந்தர குடியுரிமையும் தீயணைப்புத் துறையில் அரசு வேலை வழங்க உத்தரவிட்டார்.
கசாமாவின் துணிச்சலான செயலுக்கு பாரிஸ் நகர காவல்துறையும் அவருக்கு பாராட்டு சான்று வழங்கியுள்ளது.
தொடர்புடையவை: