மொசாம்பிக்கில் தீவிரவாதிகள் அட்டுழியம்: குழந்தைகள் உட்பட 10 பேரின் தலை துண்டிப்பு

Last Modified : 29 May, 2018 11:36 pm

மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் குழந்தைகள் உள்பட 10 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மொசாம்பிக் நாட்டின் வடக்கே பல்மா என்ற சிறிய நகர் அமைந்துள்ளது.  இங்கு இயற்கை வாயு வளம் அதிகம் உள்ளது.  இதனால் நாட்டின் புதிய இயற்கை வாயு வளமிக்க நகராக இது உருவெடுத்துள்ளது.  இந்நகருக்கு சற்று தொலைவில் மோன்ஜேன் என்ற கிராமம் உள்ளது.

இங்கு வசித்து வந்த பொதுமக்களில் குழந்தைகள் உள்பட 10 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடந்துள்ளனர்.

இதுபற்றி பல்மா நிர்வாகி டேவிட் கூறும்பொழுது, இந்த சோக சம்பவம் பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனை உள்ளூரின் மத தலைவர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.  இந்த படுகொலையை ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் நடத்தி இருக்க கூடும் என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close