நிபா வைரஸ் பீதி: கேரள பழங்களுக்கு அமீரகம் தடை

  Padmapriya   | Last Modified : 30 May, 2018 08:50 pm

nipah-scare-uae-bans-import-of-fruits-and-vegetables-from-kerala

நிபா வைரஸ் தொடர்பான அச்சம் காரணமாக கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. 

இது தொடர்பாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ள அறிக்கையில், கேரளாவிலிருந்து மாம்பழம், பேரீட்சை, வாழைப்பழங்கள், காய்கறிகள் என எதையும் இறக்குமதி செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக 14 பேர் உயிரிழந்த நிலையில், பழந்தின்னி வௌவால்களால் இந்த வைரஸ் பரவுவதாக தகவல் பரப்பப்பட்டது. 

ஆனால் கேரள மக்களை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ், பழந்தின்னி வௌவால்கள் மூலம் பரவவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 

கோழிக்கோடு மாவட்டத்தில் மூசா என்பவருக்குச் சொந்தான கிணற்றில் இருந்த வௌவால்கள் மூலம்தான் நிபா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது. இதையடுத்து அங்குள்ள 21 வௌவால்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, புனேவில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்மூலம், முதற்கட்ட ஆய்வில் பழந்தின்னி வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

தொடர்ந்து மறு பரிசோதனைக்கு வௌவால்களின் இரத்த மாதிரிகளை அனுப்பியுள்ளது கேரள நிர்வாகம்.

ஆனால் சர்வதேச நாடுகள் பல, கேரளத்திலிருந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. அம்மாநிலத்தில் பழங்களின் விற்பனை ஏற்கனவே சரிந்த நிலையில் தற்போது ஏற்றுமதிக்கும் தடை ஏற்பட்டுள்ளது. கேரளத்தை தவிர, பிற இந்திய மாநிலங்களின் பழங்களுக்கு பல நாடுகள் இறக்குமதிக்கு தடை விதித்து வருகின்றன. இதனால் கேரளாவில் மட்டும் 100 டன் காய்கறி பழங்கள் தேங்கியுள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close