ஆப்கனில் நேட்டோ பயங்கர தாக்குதல்: 50 தலிபான் தளபதிகள் பலி!

  Padmapriya   | Last Modified : 01 Jun, 2018 06:04 pm
fifty-afghan-taliban-leaders-killed-in-rocket-strike-u-s-military-says

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய ராக்கெட் வீச்சில் 50 தாலிபான் தளபதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை தீவிரவாதிகள் தரப்பு மறுத்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி, தாலிபான் தீவிரவாதிகளுடன் நேரடி சமரச பேச்சுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை அவர்கள் ஏற்காமல், தொடர்ந்து ராணுவத்தையும், போலீசையும் குறி வைத்து அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகளும், ஆப்கானிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்துகின்றன.

இந்த நிலையில் அங்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் முசா காலா மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி தாலிபான் தளபதிகள் கூட்டம் நடப்பதாக அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததாகவும், உடனடியாக அந்த இடத்தை குறிவைத்து தொடர்ந்து ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடைபெற்றதாகவும், அதில் தாலிபான் தளபதிகள் 50 பேர் பலியாகி விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் மார்ட்டின் டோனல் கூறும்போது, "தாலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். இது அவர்களுக்கு விழுந்த மிகப்பெரும் அடி" என்று குறிப்பிட்டார்.

தாலிபான் மறுப்பு:

இது பற்றி அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் காரி யூசுப் அகமதி விடுத்து உள்ள அறிக்கை ஒன்றில், "இது தவறான பிரசாரம். இந்த தாக்குதலில் முசா காலா பகுதியில் 2 வீடுகள்தான் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இதில் அப்பாவி மக்கள் 5 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடம், மக்கள் குடியிருப்பு பகுதி ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close