ஜூலை 1 முதல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பயன்பாட்டிற்கு வரி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Jun, 2018 03:52 am
uganda-to-levy-tax-on-whatsapp-facebook-viber-and-twitter

சமூக வலைதளங்களின் பயன்பாட்டிற்கு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் வரி விதிக்க உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது. 

இன்றைய இளசுகளை அடிமையாக்கியுள்ள ஃபேஸ்புக், வாட்ஸ் அப், வைபர், ட்விட்டர் போன்ற சமூக வலைதள பயன்பாட்டிற்கு வரி விதிக்கவுள்ளதாக உகாண்டா அரசு அறிவித்துள்ளது. இன்று செய்திகள் சேனல்களை விட மிக வேகமாக செய்திகளை பரப்புவது சமூக வலைதளங்கள் தான். உண்மை, பொய் என ஆராயாமல் அனைத்து கருத்துகளையும் வைரலாக்குவதே சமூக வலைதளங்களின் சேட்டை. இந்நிலையில் சர்ச்சைக்குரிய சமூக வலைதள பதிவுகளை கட்டுப்படுத்தவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த புதிய வரிவசூல் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து உகாண்டாவின் அதிபர் யோவேன் முசேவினி கூறுகையில், “சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டால் அந்நாட்டு பணத்தின்படி 200 சில்லிங் வரியாக செலுத்த வேண்டும். இந்த வரிப்பணத்தை நாட்டின் கடனை அடைக்க பயன்படுத்தவுள்ளோம். மேலும் மொபைல் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்தால் 1% வரி வசூலிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதுபோன்ற ஒரு சட்டம் இந்தியாவில் இருந்தால் என்னவாகும் என்பது பலரின் மைண்ட் வாய்ஸ். இந்த புதிய வரிவசூலை அறிந்த மோடி அரசு விரைவில் இந்த சட்டத்தை இந்தியாவில் கொண்டுவந்தாலும் வரலாம் என நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close